Skip to main content

Posts

Featured

ஒரு மகனின் தகப்பன்

      அது 90களின் துவக்கம், வானொலி தொலைய ஆரம்பித்து தொலைகாட்சி தலையெடுக்க ஆரம்பித்த சமயம். எனக்கு அப்போது ஓரு எட்டு வயது இருக்கும், நான் அதிகமாக மற்ற சிறுவர்களுடன் விளையாடாத சுபாவமுடயவன். அதனால் நானே சில சொப்புகளையும் குப்பிகளையும் வைத்து தனியாக விளையாடுவேன். மற்ற சிறுவர்களுக்கு கபடியும் கில்லியும் பிரதான விளயாட்டுகளாக இருந்தன, கிரிக்கெட் என்பது வாலிபர்களுக்கானது என்பது எங்கள் எண்ணம்.       நான் வழக்கமாக எங்கள் வீட்டு வராந்தாவில் என்னுடைய சொப்புகளை பரப்பி விளையாடுவேன். அங்கே நான் சிருஷ்டித்த கதைகள் ஏராளம் கதாபாத்திரங்கள் ஏராளம். பின்னாட்களில் அதே சாயலொத்த சில கதைகளையும், கதாபாத்திரங்களையும் டிஸ்னி மற்றும் சில கார்டூன் சேனல்களில் பார்த்து வியந்திருக்கிறேன், ஏனென்றால் அவற்றின் பல கதைகளும் கதாபாத்திரங்களும் நான் கற்பனையில் விளையாடியவைக்கு ஒத்திருந்தன. நான் அவற்றுடன் பல இரவுகளில் கனவுகளில் சஞ்சரிதிருக்கிறேன், நான் வைத்திருப்பது சின்ன குப்பிகளானாலும் என் கற்பனையில் அவைகளுக்கு நான் பல வடிவங்கள் புனைதிருந்தேன். பின்னாட்களில் நான் கனவுகளில் என் நாட்களை தொலைத்தமை...

Latest Posts

ஓ நெஞ்சே நீ தான்..!