ஓ நெஞ்சே நீ தான்..!
சிட்டி பஸ்சும் 80's ஹிட்சும்
மொதல்ல எல்லாம் எங்களுக்கு இந்த பாட்டு மேட்டர் புரியவே இல்ல, பிறகு தான் அந்த டைம்ல சரியா எங்க வீட்லேருந்து ரெண்டு வீடு தள்ளி இருக்குற அக்கா typing class முடிஞ்சு வரது தெரிஞ்சுது. மொதல்ல அவங்க மொறசுட்டு போவாங்க, கொஞ்சநாள் கழிச்சு லேசா அர கண்ணால அண்ணாவ பாத்துட்டு போவாங்க, பிறகு கொஞ்சநாளா சிரிச்சுட்டே போவாங்க. அதுவர நான் நல்லா தான் இருந்தேன், அதுக்க பிறகு தான் அண்ணனோட அலப்பற தாங்க முடியல. இத கொண்டு கொடு, அத கொண்டு கொடு, அந்த புக்க வாங்கிட்டு வா.... அது இதுன்னு என்ன ஒரு Professional Couriers போல use பன்னுனான். எனக்கு இது புதுசு இல்ல ஏற்கனவே அண்ணாவுக்காக ரெண்டு மூணு அக்காமார் கிட்ட இந்த வேல பாத்துருக்கேன். எல்லாம் அவன் வாங்கி தர்ற Big Babol க்காகவும் அது கூட கெடைக்குற Cricket Card க்காகவும் தான். ஆனா அண்ணா தான் எல்லாத்தையும் புதுசு போலவே handle பண்ணுவான்.
பாட்டு நம்பர் 2 ம் அண்ணாவோட நம்பர் 4 ம்
அந்த அக்கா typing class முடிக்குற வர இது continue ஆச்சு. ஒரு நாள் நான் வீட்டு பின்னால நிக்கும் போது ஒண்ணு பட்டுன்னு என்னோட முதுகுல வந்து விழுந்தது, என்னடான்னு திரும்பி பாத்தா ஒரு வெள்ள பேப்பர்ல சுத்துன கல் ஒண்ணு கீழ கிடந்தது. எனக்கு புரிஞ்சு போச்சு நான் எதிர் பாத்தபடியே அந்த அக்கா அவங்க வீட்டுல நின்னுட்டு இருந்தாங்க. வழக்கம் போல அண்ணாக்கு கொடுக்குறதுக்கு முன்னால நான் ஒரு தடவ படிச்சேன்.
என்னோட Bike service ல இருக்கு, அதனால காலைல சிட்டி பஸ்ல தான் ரூம் போகணும். அதனால அலுவலகம் வரும்போதே நண்பனிடம் அவனுடைய memory card வாங்கி வந்துட்டேன், ஏன்னா அவன் எபோவுமே சூப்பர் songs collections வச்சுருப்பான். எபோவும் போல இரவு அலுவல் முடிந்து நான் எதிர் பார்த்த அந்த அதிகாலை வந்தது. சரி எப்படியும் ஒரு அரை மணி நேர பயணம் இருக்கும் அதனால் மெமரி கார்டை என்னுடைய மொபைல்ல போட்டுட்டு பஸ்க்காக காத்திருந்தேன்.
பஸ் வந்தது உக்காந்து மெதுவா music player on பண்ணி playlist பாத்தேன். 'Hitz of 80's' playlist'. சரி இளையராஜா பாட்டு கேட்டு ரொம்ப நாளாச்சேனு அதையே போட்டேன்... அடுத்தடுத்து ரெண்டு பாட்டு, அந்த ரெண்டும் என்ன time machine-னா எனக்கு தெரியாது! ஆனா அவை என்னை பலவருடங்களுக்கு பின்னால் கொண்டு சென்றது.
"1. ஓ நெஞ்சே நீ தான் நான் பாடும் கீதங்கள்.
2. வானுயர்ந்த சோலையிலே நீ நடந்த பாதையெல்லாம்."
சும்மா இலீங்க இந்த பாடல்களுக்கும் எனக்கும் நேரடி தொடர்பு உண்டோ இல்லையோ எனக்கு தெரியாது, ஆனா என்னோட அண்ணா(பெரியம்மா பையன்) மூலமா எனக்கு ரொம்ப நல்லா தொடர்பு உண்டு. இப்போ ஒரு பன்னிரெண்டு வருஷம் பின்னால போகலாம்.
அப்போ எல்லாம் ரேடியோ காலம் மாறி டேப் ரெக்கார்டு ரொம்ப பேமஸ். எங்க வீட்ல ஒரு Panasonic டேப் ரெக்கார்டர் உண்டு. எங்க அண்ணாவும் எங்க வீட்ல எங்க கூட தான் தங்கி படிச்சுட்டு இருந்தான். அப்போ எல்லாம் TDK இல்ல HMV empty கேசட் வாங்கி அதுல புடிச்ச பாட்டு எழுதி கொடுத்தா பதிஞ்சு தருவாங்க. அப்படி அண்ணா ஒரு கேசட் வங்கி பதிஞ்சு வச்சுருந்தான். அதுலதான் நான் மேலே சொன்ன இரண்டு பாட்டுகளும் இன்னும் சில இளையராஜா பாடல்களும் இருந்தன. சரியா 4.45 மணிக்கு இந்த பாட்டு #1 பிளே ஆகும், வழக்கத்த விட அந்த நேரத்துல கொஞ்சம் சத்தம் அதிகமாவே இருக்கும். இப்படியே ஒரு நாலு மசாம் ஓடுனதுனால அதோட ரீல் அட்க்கடி வெளிய வந்துரும். இதுக்காகவே Reynolds கம்பனிகாரன் அந்த Reynolds 045 பேனாவ கண்டுபுடிசானா தெரியாது, அத வச்சு தான் அண்ணா ஒரு நாலு சுத்து சுத்தி அந்த அருந்த டேப்ப சரி பண்ணுவான். திரும்ப வழக்கம் போல ஓ நெஞ்சே....
அடுத்த வீட்டு அக்காவும் அலப்பற அண்ணாவும்
மொதல்ல எல்லாம் எங்களுக்கு இந்த பாட்டு மேட்டர் புரியவே இல்ல, பிறகு தான் அந்த டைம்ல சரியா எங்க வீட்லேருந்து ரெண்டு வீடு தள்ளி இருக்குற அக்கா typing class முடிஞ்சு வரது தெரிஞ்சுது. மொதல்ல அவங்க மொறசுட்டு போவாங்க, கொஞ்சநாள் கழிச்சு லேசா அர கண்ணால அண்ணாவ பாத்துட்டு போவாங்க, பிறகு கொஞ்சநாளா சிரிச்சுட்டே போவாங்க. அதுவர நான் நல்லா தான் இருந்தேன், அதுக்க பிறகு தான் அண்ணனோட அலப்பற தாங்க முடியல. இத கொண்டு கொடு, அத கொண்டு கொடு, அந்த புக்க வாங்கிட்டு வா.... அது இதுன்னு என்ன ஒரு Professional Couriers போல use பன்னுனான். எனக்கு இது புதுசு இல்ல ஏற்கனவே அண்ணாவுக்காக ரெண்டு மூணு அக்காமார் கிட்ட இந்த வேல பாத்துருக்கேன். எல்லாம் அவன் வாங்கி தர்ற Big Babol க்காகவும் அது கூட கெடைக்குற Cricket Card க்காகவும் தான். ஆனா அண்ணா தான் எல்லாத்தையும் புதுசு போலவே handle பண்ணுவான்.பாட்டு நம்பர் 2 ம் அண்ணாவோட நம்பர் 4 ம்
அந்த அக்கா typing class முடிக்குற வர இது continue ஆச்சு. ஒரு நாள் நான் வீட்டு பின்னால நிக்கும் போது ஒண்ணு பட்டுன்னு என்னோட முதுகுல வந்து விழுந்தது, என்னடான்னு திரும்பி பாத்தா ஒரு வெள்ள பேப்பர்ல சுத்துன கல் ஒண்ணு கீழ கிடந்தது. எனக்கு புரிஞ்சு போச்சு நான் எதிர் பாத்தபடியே அந்த அக்கா அவங்க வீட்டுல நின்னுட்டு இருந்தாங்க. வழக்கம் போல அண்ணாக்கு கொடுக்குறதுக்கு முன்னால நான் ஒரு தடவ படிச்சேன்.
"எனக்கு அடுத்த மாசம் கல்யாணம் பண்ண முடிவு செஞ்சுருக்காங்க, தயவு செஞ்சு எங்க வீட்ல வந்து பொண்ணு கேக்கவும். இப்படிக்கு உங்கள் நினைவுடன் _________"
ரெண்டு நாளா அண்ணா ஒரே feeling..!!!! எங்க முன்னால எதுவும் சாப்பிட மாட்டான், தனியா உக்காந்து வானத்த பாக்குறது இப்படி பக்காவா ஒரு "தங்க மனசுக்காரன்" முரளி effect கொடுத்துட்டு இருந்தான். ஒரு நாலு மாசத்துக்கு ஒரு தடவ அவனுக்கு இந்த மாதிரி ஒரு role ஆண்டவன் கொடுப்பான். இந்த நேரத்துல தான் அண்ணா பாட்டு நம்பர் 1 க்கு பதிலா பாட்டு நம்பர் 2 போட ஆரம்பிச்சான். அந்த அக்காவும் ஒரு சோக பார்வை பார்த்துட்டு போகும்.
அந்த அக்காவுக்கு கல்யாணம் முடிஞ்சு மாபிள்ள வீட்டுக்கு போன நாள் ராத்திரி இந்த பாட்ட low volume அண்ணா கேட்டுட்டு இருந்தான், அதே தங்க மனசுக்காரன் பீல்.
"அதான் எல்லாம் முடிஞ்சு போச்சுல்ல சரி விடு, டேப்ப ஆப் பண்ணு.., இனியாவது இது நல்லா இருக்கட்டும்." - நான்.
"இல்ல டா உனக்கு புரியாது.., அடுத்த வாரமும் இந்த பாட்டு தேவபடுது." - அண்ணா.
எனக்கு புரியல...!!!
ரெண்டு நாள் கழிச்சு அந்த மேட்டர் கேட்ட பின்னால தான் எனக்கு அண்ணா சொன்னதுக்கு அர்த்தம் புரிஞ்சுது. அண்ணாவோட class mate அந்த குறிப்பிட்ட அக்காவுக்கு நிச்சயதார்த்தம் (ஒரு bonus news இவங்க அண்ணாவோட நாலாவது).
அந்த நாள் வந்தது அதே பாட்டு நம்பர் 2, அதே தங்க மனசுக்காரன் feel...!!!! ஆனா அக்கா மட்டும் வேற.


Good & Decent Manmadhan Story.... Why cant U try to make this Story as Short Film!!!!
ReplyDeleteI am also having a thought about Short Films, but I am not technically sound in that, looking for such guys to hangup.
ReplyDelete